நடிகர் துருவ் விக்ரமுக்கு பிறந்தநாள் - மாரி செல்வராஜ் வாழ்த்து..!
கோலிவுட்டின் முன்னணி நடிகரான சீயான் விக்ரமின் மகன் நடிகர் துருவ் விக்ரம் ஆவார். தெலுங்கில் வெளியாகிய அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்யா வர்மா படம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்ததாக மகான் படத்தில் தந்தை விக்ரமுடன் சேர்ந்து நடித்தார். இதனை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் பைசன் படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இயக்குநர் பா. ரஞ்ஜித்தின் நீலம் புரெடக்ஷன் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இன்று துருவ் விக்ரம் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை தொடர்ந்து பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பைசன் திரைப்படத்தின் இயக்குநரான மாரி செல்வராஜ் துருவ் விக்ரமுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”எனது அன்பின் துருவ்க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பிரமிக்க வைக்கும் உன் உழைப்பின் மூலம் உன் கனவுகள் அத்தனையும் சாத்தியமாகட்டும் நிச்சயம் வெல்வாய் நீ . வாழ்த்துக்கள்" தெரிவித்துள்ளார்.
அத்துடன் துருவ் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை ஆறு மணிக்கு பைசன் படத்தின் 3 வது பாடலான சீனிக்கண்ணு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.