For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"Happy Birthday Hero" - SK பிறந்தநாள் ஸ்பெஷலாக 'பராசக்தி' படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த சுதா கொங்கரா!

சிவகார்த்திகேயன் பிறந்தநாளை ஒட்டி இயக்குநர் சுதா கொங்கரா 'பராசக்தி' படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
10:48 AM Feb 17, 2025 IST | Web Editor
 happy birthday hero    sk பிறந்தநாள் ஸ்பெஷலாக  பராசக்தி  படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த சுதா கொங்கரா
Advertisement

ரஜினிகாந்த், விஜய்க்கு பிறகு ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்து வைத்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் வீடியோ ஜாக்கி, தொகுப்பாளர் என வளர்ந்து வந்த அவர் தனுஷின் 3 படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மெரினா, எதிர்நீச்சல் என தனது திறமையான மற்றும் நகைச்சுவை கலந்த நடிப்பால் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகராக வலம் வருகிறார்.

Advertisement

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அமரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸின் இயக்கத்தில் நடித்துள்ளார். மேலும், சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும் திரைபிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சுதா கொங்கரா சிவகார்த்திகேயனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதன்படி, அவர் அதாவது பராசக்தி படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு, அதில் "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹீரோ! சிவகார்த்திகேயன். உங்களுடன் இணைந்து பணிபுரிவதில் முழுமையான மகிழ்ச்சி" என்று அதில் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement