ஆஸ்திரேலியாவில் ஹமாஸ் தீமில் பிறந்தநாள் கேக் - வெடித்த சர்ச்சை!
ஆஸ்திரேலியாவில் நான்கு வயது சிறுவனின் பிறந்தநாளுக்கு ஹமாஸ் தீமில் கேக் தயார் செய்து, அதன் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய காலகட்டங்களில் திருமணங்கள், பிறந்தநாள்கள் போன்றவை ஏதேனும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கேற்றவாறு நாம் எந்த தீமில் கேக் விரும்புகிறோமோ, கேட்கிறோமோ அதே தீமில் நமக்கான கேக்கை டெலிவிரி செய்கின்றன பேக்கரிகள். அந்த வகையில் தற்போது நான்கு வயது சிறுவனின் பிறந்தநாளுக்கு செய்யப்பட்ட கேக் உலகம் முழுவதும் பேசுபொருளாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கேக்கில் ஹமாஸின் கொடி, ஹமாஸின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைதாவின் படமும் இடம்பெற்றுள்ளன. மேலும் அந்த சிறுவனும் ஹமாஸ் அமைப்பினரின் கெட்டப்பில் இருப்பதற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடங்கிய மோதல் தற்போது வரை நடைபெற்று வரும் நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்ததோடு பலர் வீடு மற்றும் உடமைகளை இழந்து தவித்து வருவது குறிப்பிடதக்கது.