For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“அமெரிக்காவின் காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்க வேண்டும்... இல்லையேல் அழிவை சந்திக்கும்” - இஸ்ரேல் எச்சரிக்கை!

அமெரிக்காவின் காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்கவில்லை என்றால் அழிவை சந்திக்க நேரிடும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
09:47 AM May 31, 2025 IST | Web Editor
அமெரிக்காவின் காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்கவில்லை என்றால் அழிவை சந்திக்க நேரிடும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
“அமெரிக்காவின் காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்க வேண்டும்    இல்லையேல் அழிவை சந்திக்கும்”   இஸ்ரேல் எச்சரிக்கை
Advertisement

அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் முன்வைத்த காசா போர் நிறுத்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஹமாஸை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் காட்ஸ் வலியுறுத்தியுள்ளார். இல்லையெனில் ஹமாஸ் அழிவை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

மேலும் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் வரை காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் முழு பலத்துடன் தொடரும் என்றும், ராணுவ வீரர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இஸ்ரேல் கடுமையான வான், தரை மற்றும் கடல்வழி தாக்குதல்களை தொடரும் எனவும் இஸ்ரேல் காட்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வதற்காக அமெரிக்கா முன்வைத்த புதிய செயல்திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், ஹமாஸும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுகொள்ள வேண்டும் என இஸ்ரேல் தெரிவித்து வருகிறது.

காஸாவில் 60 நாள்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கான செயல்திட்டத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் இஸ்ரேலிடம் அளித்தார். இஸ்ரேல் அரசு அதை ஏற்பதாக அறிவித்துள்ளது. தற்போது அந்த செயல் திட்டம் ஹமாஸ் அமைப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்தத் திட்டத்தில், இரு தரப்பினரும் சண்டையை 60 நாள்களுக்கு முழுமையாக நிறுத்திவைப்பது, தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 10 பேரை ஹமாஸ் அமைப்பினர் இரண்டு கட்டங்களாக விடுவிப்பது, உயிரிழந்த 18 பிணைக் கைதிகளின் உடல்களை அவர்கள் ஒப்படைப்பது, இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவது. காஸா பகுதியில் நிவாரண உதவிகளை அதிகப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தப் போர் நிறுத்தம் அமலுக்கு வந்து, அது நீட்டிக்கப்பட்டால் அனைத்து பிணைக் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என்று கரோலின் லீவிட் நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் காசா போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா முன்வைத்துள்ள செயல்திட்டம் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பதாக ஹமாஸ் அமைப்பு விமர்சித்துள்ளது.

Tags :
Advertisement