ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை பிடிக்கப்போவது உறுதி! - இஸ்ரேல் பிரதமர் பேச்சு
ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வாரை பிடிக்கப்போவது உறுதி என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
ஹமாஸ் தலைவர் இருப்பதாக நம்பப்படும் காஸாவின் தெற்குப்பகுதிகளைச் சுற்றி இஸ்ரேலின் படை வளைத்து விட்டது. தற்போது அவர்கள் சின்வாரின் வீட்டைச் சுற்றி வளைத்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது: தமிழ்நாடு அரசு விளக்கம்
மேலும், அங்கிருந்து அவர் எளிதாகத் தப்பி ஓடிவிடுவார் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் விரைவில் அவரைப் பிடித்துவிடுவோம். செஞ்சிலுவை அமைப்பினரிடம் காஸாவில் இருக்கும் இஸ்ரேல் பிணைக் கைதிகளைச் சந்தித்து அவர்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளைச் செய்து தர கேட்டுக் கொண்டுள்ளோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.