For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஹஜ் பயணம் மேற்கொண்ட 98 இந்தியர்கள் பலி | வெளியான அதிர்ச்சி தகவல்!

09:21 PM Jun 21, 2024 IST | Web Editor
ஹஜ் பயணம் மேற்கொண்ட 98 இந்தியர்கள் பலி   வெளியான அதிர்ச்சி தகவல்
Advertisement

இந்தியாவில் இருந்து 1.75 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொண்ட நிலையில்,  இந்த ஆண்டு மட்டும் இதுவரை 98 இந்தியர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலங்களின் ஒன்றான ஹஜ், இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகும்.  அனைத்து இஸ்லாமியர்களும் ஒரு முறையாவது இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.  அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மெக்காவில் உள்ள ஹஜ்ஜிற்கு பயணம் மேற்கொள்கின்றனர்.  அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணம் கடந்த 14ம் தேதி தொடங்கியது.

இதற்காக சுமார் 15 லட்சம் பக்தர்கள் சௌதி அரேபியாவிலுள்ள புனித நகரமான மெக்காவில் திரண்டுள்ளனர்.  இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு மட்டும் 1.75 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொண்ட நிலையில்,  இதுவரை 98 இந்தியர்கள் பலியானதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.  அதில் பெரும்பாலனோர் இயற்கை மரணமடைந்ததாகவும், 4 பேர் விபத்தில் பலியானதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஹச் பயணத்தின்போது 187 இந்தியர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.  நடப்பாண்டில் ஹஜ் பயணத்தின்போது வெப்ப அலை காரணமாக 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement