#GVP25 | கிங்ஸ்டன் படத்தின் டீசர் எப்போது? வெளியான அப்டேட்!
ஜி.வி. பிரகாஷ் குமாரின் 25வது படமான ‘கிங்ஸ்டன்’ படத்தின் டீசர் அப்டேட் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமாரின் 25 ஆவது படமாக 'கிங்ஸ்டன்' உருவாகி வருகிறது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல் பிரகாஷ் இயக்கி வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் திவ்யபாரதி நடிப்பில் வெளியான பேச்சிலர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, இந்த படத்தில் திவ்யபாரதி நாயகியாக நடிக்கிறார்.
மேலும் இப்படத்தில் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி, ‘கல்லூரி’ வினோத், சேத்தன், குமரவேல் மற்றும் மலையாள நடிகர் சபுமோன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடிகர் கமல்ஹாசன் சென்னையில் தொடங்கி வைத்தார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் மீனவர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
Our beloved @dhanushkraja sir to launch the #Kingston Tamil teaser for us ❤️❤️ pic.twitter.com/evKqYFvWFk
— G.V.Prakash Kumar (@gvprakash) January 8, 2025
சமீபத்தில் இப்படத்தின் First Look போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டீசர் நாளை (ஜனவரி 9) மாலை 06:01 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் டீசரை நடிகர் தனுஷ் வெளியிடுவார் என படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.