'கிங்ஸ்டன்' படத்தில் மீனவராக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்!
ஜி.வி. பிரகாஷ் குமார் தனது 25வது படமான 'கிங்ஸ்டன்' படத்தில் மீனவராக நடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படத்தை கமல் பிரகாஷ் இயக்கி வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் திவ்யபாரதி நடிப்பில் வெளியான பேச்சிலர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, இந்த படத்தில் திவ்யபாரதி நாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தில் 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஆண்டனி, 'கல்லூரி' வினோத், சேத்தன், குமரவேல், மலையாள நடிகர் சபுமோன் உட்பட பலர் நடிக்கின்றனர். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடிகர் கமல்ஹாசன் சென்னையில் தொடங்கி வைத்தார். இந்த படத்திற்கு 'கிங்ஸ்டன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: இன்னும் திரும்பி வராத ரூ.9,760 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள்!
கடல் பின்னணியில் திகில் சாகச படமாக தயாராகும் இப்படத்திற்கு தீவிக் வசனம் எழுதுகிறார். மேலும் கடலில் உள்ள மர்மத்தை கண்டறியும் மீனவரின் கதையாக எடுக்கப்படுவதாகவும், இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் மீனவர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.