‘பராசக்தி’ படத்தின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்!
ரஜினிகாந்த், விஜய்க்கு பிறகு ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்து வைத்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் வீடியோ ஜாக்கி, தொகுப்பாளர் என வளர்ந்து வந்த அவர் தனுஷின் 3 படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மெரினா, எதிர்நீச்சல் என தனது திறமையான மற்றும் நகைச்சுவை கலந்த நடிப்பால் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகராக வலம் வருகிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'மதராஸி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் அதர்வா, லீலா, ரவி மோகன், பாசில் ஜோசப் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
#Parasakthi songs soon 🔥🔥🔥 … SP combo is onway 🔥 @Sudha_Kongara @Siva_Kartikeyan @iam_RaviMohan @DawnPicturesOff @saregamasouth
— G.V.Prakash Kumar (@gvprakash) October 23, 2025
இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.