Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்!

12:47 PM Jul 08, 2024 IST | Web Editor
Advertisement

தடை செய்யப்பட்ட குட்கா முறைகேடு வழக்கை எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான
வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை சிபிஐ சிறப்பு
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை, லஞ்சம் பெற்று விற்க அனுமதித்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றது. இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி, சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகரிகளுக்கு எதிராக 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், இந்த வழக்கை எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழில்வளவன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கை ஆகஸ்ட் 2-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிட சிறப்பு நீதிமன்றத்துக்கு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags :
ADMKCBIGutka CaseSpecialized Court
Advertisement
Next Article