குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோயில் - வெகுவிமரிசையாக நடைபெற்ற தெப்ப உற்சவம்!
பிரசித்தி பெற்ற குத்தால உக்தவேதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி கிருத்திகையை
முன்னிட்டு தெப்ப உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான
அரும்பண்ண வனமுலைநாயகி உடனாகிய உக்தவேதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
சமயக்குரவர்கள் மூவரால் பாடல் பெற்றதும், சுந்தரர் தோல் நோய் நீக்கிய தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு, ஆலயத்தில் நேற்று
தெப்ப உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது .
முன்னதாக ஆலயத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்ற நிலையில், முருக பெருமானுக்கு பட்டாடை உடுத்தி, அணிகலன்கள் அணிந்து, மேள வாத்தியங்கள் முழங்க திருவீதி உலா காட்சி நடைபெற்றது. பின்னர் முருகப்பெருமான் கோயிலின் திருக்குளத்தில் எழுந்தருளி தெப்பத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக
ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில், தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் .