தெலுங்கில் பட்டையை கிளப்பும் குண்டூர் காரம்… கொண்டாட்டத்தில் படக்குழு...!
09:58 PM Jan 15, 2024 IST | Web Editor
Advertisement
மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகியுள்ள குண்டூர் காரம் படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
மகேஷ் பாபு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சர்காரு வாரிபட்டா. இந்த படம் சரியாக போகாத நிலையில் இப்போது குண்டூர் காரம் என்ற படத்தில் மகேஷ் பாபு நடித்து வருகிறார். இந்த படத்தை அலா வைகுந்தபுரம்லூ படத்தை இயக்கிய திரிவிக்ரம் இயக்கி வருகிறார். தமன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
Advertisement
ஸ்ரீலீலா, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயராம் ஆகியோர் மற்ற முக்கிய வேடங்களில் நடிக்க, இந்த படம் ஜனவரி 12 ஆம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு ரிலீஸ் ஆனது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் முதல் நாள் வசூல் அதிரிபுதிரியாக அமைந்துள்ளது.
முதல் நாளில் இந்த திரைப்படம் 95 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்ததாக சொல்லப்பட்டது. அடுத்த நாளில் கணிசமாக வசூல் குறைந்தாலும் மொத்தம் இரண்டு நாட்களில் சேர்த்து 130 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வருவதால் படத்தின் வசூல் மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், படம் 3 நாள்களில் ரூ.164 கோடி வசூலித்துள்ளது. சங்கராத்தியை முன்னிட்டு படக்குழுவினர் இந்த வெற்றியை கொண்டாடியுள்ளனர். இந்தக் கொண்டாட்டத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு, நடிகைகள் ஸ்ரீ லீலா, மீனாக்ஷி சௌத்ரியும் கலந்து கொண்டுள்ளனர்.