ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் துப்பாக்கி சூடு... 12 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதியில் அமைந்துள்ள போண்டி (BONDI) கடற்கரையில் அமைந்துள்ளது. இக்கடற்கரையில் யூத பண்டிகைகளில் ஒன்றான ஹனுக்காவை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த சூழலில் போண்டி (BONDI) கடற்கரையில் இன்று மாலை 5 மணியளவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், போண்டி கடற்கறையில் நிகழ்ந்துள்ள சம்பவங்கள் அதிர்ச்சி மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. காவல்துறையினரும் அவசரகால மீட்புப் பணியாளர்களும் உயிர்களைக் காப்பாற்ற களத்தில் உள்ளனர். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரைப் பற்றியும் எனது எண்ணங்கள் உள்ளன. நான் இப்போதுதான் காவல்துறை மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பகுதி பிரீமியருடன் பேசியுள்ளேன் . நாங்கள் காவல்துறையுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.