For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் இடம்பெற்ற “குணா குகை” - விஎஃப்எக்ஸ் காட்சிகள் வெளியீடு!

05:44 PM Jul 24, 2024 IST | Web Editor
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் இடம்பெற்ற “குணா குகை”   விஎஃப்எக்ஸ் காட்சிகள் வெளியீடு
Advertisement

Advertisement

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் விஎஃப்எக்ஸ் உருவாக்கம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு கொடைக்கானல் குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவான படம் மஞ்சும்மல் பாய்ஸ். கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ‘மஞ்சும்மல்’ என்ற சின்ன கிராமத்தைச் சேர்ந்த நண்பர்கள் குழு ஒன்று கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகிறது. அதில் ஒருவர் குணா குகையில் தவறி விழுந்து விடுகிறார். அவரை அவரது நண்பர்கள் குழு எப்படி மீட்டது என்பதே ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் கதை.

இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்த குணா படத்தில் இடம் பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ என்ற பாடல் இடம்பெற்று இருந்தது. இது தமிழ் ரசிகர்களுடன் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் கனெக்ட் ஆக பெரிதும் உதவியது. இதனால் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தை பார்க்க இன்று வரை தமிழ் மக்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர்.

ரூ.5 கோடி செலவில் எடுக்கப்பட்ட ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம், உலகளவில் ரூ.225 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய முதல் மலையாள படம் என்கிற சாதனையை படைத்தது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் மட்டும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ரூ.60 கோடிக்கு மேல் வசூலித்து வரலாறு படைத்துள்ளது. இப்படத்திற்காக, நடிகர் கமல்ஹாசன் மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்தினார்.

இயக்குநர் சிதம்பரம் அடுத்ததாக ஃபாண்டாம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஹிந்தி படத்தை இயக்க உள்ளார். மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் இடம்பெற்ற குணா குகை காட்சிகள் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதில், கலை இயக்குநரின் பணி முக்கியமாகக் கருதப்பட்டது. மேலும், விஎஃப்எக்ஸ் குழுவினரின் பணிகளும் தத்ரூபமாக இருந்தன. தற்போது, விஎஃப்எக்ஸ் காட்சிகள் உருவாக்க விடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.

Tags :
Advertisement