For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பெங்களூரு அணிக்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயித்தது குஜராத் அணி!

09:40 PM May 04, 2024 IST | Web Editor
பெங்களூரு அணிக்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயித்தது குஜராத் அணி
Advertisement

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்களை இலக்காக குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயித்துள்ளது.

Advertisement

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.ஏற்கனவே 51 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்றைய போட்டியில், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஃபாப் டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதுகின்றன. கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்கியது.

இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய சாஹா ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். 4வது ஓவரில் கில் 7 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில், அவரது விக்கெட்டினை சிராஜ் கைப்பற்றினார். தொடர்ந்து, சுதர்சன் 14 பந்தில் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், தனது விக்கெட்டினை கிரீனின் பந்தில் இழந்து வெளியேறினார்.

15 ஓவர்கள் முடிந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்தது. ரஷித் கான் 14 பந்தில் 18 ரன்கள் சேர்த்த நிலையில், தனது விக்கெட்டினை யாஷ் தயால் பந்தில் க்ளீன் போல்ட் ஆகி இழந்தார். 18வது ஓவரின் கடைசி பந்தில் ராகுல் திவேதியா 21 பந்தில் 35 ரன்கள் சேர்த்து, யாஷ் தயாள் பந்தில் ஆட்டமிழந்தார். 19 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் சேர்த்திருந்தது. 

20வது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் குஜராத் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இதில் பெங்களூரு அணி ஹாட்ரிக் விக்கெட்டுகள் கைப்பற்றியது. குஜராத் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷாருக்கான் 37 ரன்கள் எடுத்திருந்தார். எனவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 148 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
Tags :
Advertisement