Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

210 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்... ராஜஸ்தான் வெற்றி பாதைக்கு திரும்புமா?!

ராஜஸ்தான் அணிக்கு 210 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது குஜராத் அணி...
09:28 PM Apr 28, 2025 IST | Web Editor
Advertisement

10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் 47-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

Advertisement

போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் குஜராத் அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ராஜஸ்தான் அணிக்கு 210 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் 84 ரன்களும், ஜோஸ் பட்லர் 50 ரன்களும் அடித்தனர்.

ராஜஸ்தான் தரப்பில் மகிஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகளும், ஆர்ச்சர், சந்தீப் சர்மா தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். தொடர்ந்து 210 ரன்களை இலக்காக கொண்டு ராஜஸ்தான் களமிறங்க உள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையிலான  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றி, 7-ல் தோல்வி என 4 புள்ளியுடன் 9-வது இடத்தில் இருக்கிறது.

அதேநேரத்தில், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று வலுவான நிலையில் காணப்படுகிறது.

Tags :
Gujarat TitansIPL2025Rajasthan RoyalsRRvsGT
Advertisement
Next Article