Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Gujarat வெள்ளத்தில் சிக்கிய கிரிக்கெட் வீராங்கனை... பத்திரமாக மீட்ட மீட்பு குழுவினர்!

07:20 PM Aug 29, 2024 IST | Web Editor
Advertisement

குஜராத்தில் பெய்த தொடர் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீராங்கனை ராதா யாதவை மீட்பு படையினர் மீட்டனர். 

Advertisement

குஜராத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து 4வது நாளாக பெய்து வரும் இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் கனமழையால் மாநிலத்தில் உள்ள ஆறுகள்,  நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது.

மேலும், இந்த கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் மழை காரணமாக வதோதராவில் விஸ்வாமித்ர ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், நகரின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின.

இதனால், வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்து வரும் மக்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். வதோராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை ராதா யாதவும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். அந்த பகுதிக்கு சென்ற மீட்பு படையினர் படகு மூலம் ராதா யாதவ் உள்ளிட்டோரை மீட்டனர்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ராதா யாதவ், "மிக மோசமான சூழலில் சிக்கிய எங்களை காப்பாற்றி உணவளித்த வதோரா தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி"  என பதிவிட்டுள்ளனார். தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை, ராணுவம், இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடலோரக் காவல்படையினர் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகின்றனர்.

Tags :
FloodGujaratHeavy rainfallRadha YadavRescue
Advertisement
Next Article