#Gujarat | பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு!
மகாராஷ்டிர மாநிலம் திரிம்பகேஷ்வரில் இருந்து குஜராத்தில் உள்ள துவாரகாவுக்கு பக்தர்கள் பேருந்தில் சென்றுக்கொண்டிருந்தனர். இந்த பேருந்தில் 48 பேர் பயணம் செய்தனர். இந்த பேருந்து இன்று அதிகாலை 4.15 மணியளவில் குஜராத் மாநில சபுதாரா மலைவாஸ்தலத்திற்கு அருகே சென்றுகொண்டிந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிர்பாராதவிதமாக அருகில் உள்ள தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையும் படியுங்கள் : கொள்கைத் தலைவர்களின் சிலைகளை திறந்து வைத்தார் தவெக தலைவர் #Vijay!
அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசார் மட்டும் மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் பலத்த காயமடைந்தனர். மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்க அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடப்பதற்கு 2.5 கிலோ மீட்டருக்கு முன்பு பேருந்தை நிறுத்தி அனைவரும் தேநீர் அருந்தியுள்ளனர். பேருந்து மீண்டும் புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிகிறது. பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.