For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் சரணடைய வழிகாட்டு நெறிமுறை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

07:11 PM Mar 08, 2024 IST | Web Editor
கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் சரணடைய வழிகாட்டு நெறிமுறை   உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Advertisement

கொலை வழக்குகளில் சரணடைபவர்கள் சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்திற்கு பதிலாக, வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது என என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் திமுக நிர்வாகி ஆறாமுதன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்ததை எதிர்த்து அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு முறையிட்டார். தேடப்படும் குற்றவாளிகள் கொலை சம்பவம் நடந்த, அந்த எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தில் தான் சரணடைய அடைய வேண்டும் எனவும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கவும் கோரிக்கை விடுத்தார்.

கோரிக்கையை ஏற்ற நீதிபதி, இனி கொலை வழக்குகளில் சரணடைபவர்கள் சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்திற்கு பதிலாக, வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது எனவும் உத்தரவிட்டார்.

மேலும், சம்பந்தப்பட்ட நீதித்துறை எல்லைக்கு உட்படாத மாஜிஸ்திரேட் முன்பு தாக்கல் செய்யப்படும் மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல. ஒருவேளை சரணடைந்தால் குறிப்பிட்ட மாஜிஸ்ட்ரேட் தனது எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து சரணடையும் நபரை காவலில் எடுக்க உத்தரவிடலாம். என வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்ததோடு, அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

Tags :
Advertisement