GTvsSRH | ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த குஜராத்!
ஐபிஎல் 2025 லீக் சுற்றில் குஜராத் அணி ஹைதராபாத் அணியை இன்று(மே.02) எதிர்கொண்டு வருகிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும், இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸை தொடங்கிய குஜராத் அணியில் சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் இணைந்து பவர் பிளேவில் அதிரடியாக விளையாடி வந்தனர். இதையடுத்து ஜீஷன் அன்சாரி வீசிய 7வது ஓவரில் 48 ரன்களுடன் சாய் சுதர்சன் ஆட்டமிழந்தார். இதனிடையே ஒருபக்கம் கேப்டன் கில் ஹைதராபாத் பவுலர்களுக்கு அச்சுறுத்தலாக பேட்டிங் செய்து வந்தார்.
அதன் பின்னர், சுப்மன் கில்லுடன் கை கோர்த்த ஜோஸ் பட்லர் தனது பங்கிற்கு சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து, கில் 76 ரன்கள் அடித்து ரன் அவுட்டாகி விக்கெட்டை பறிகொடுத்தார். இவருக்கடுத்து ஜோஸ் பட்லர் 64 ரன்கள் அடித்து பேட் கம்மின்ஸிடம் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 21 ரன்கள் அடித்தார்.
அதன் பின்பு வந்தவர்கள் சிங்கிள் டிஜிட்டில் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்த குஜராத் அணி 224 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 225 என்ற இமாலய இலக்கை ஹைதராபாத் அணி சேஸிங் செய்ய உள்ளது.