#GTvsPBKS | அதிரடியாக விளையாடிய சுப்மன் கில்... பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், முதலாவதாக களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 199 ரன்கள் எடுத்தது. எனவே பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் இன்று (ஏப்ரல் 4) நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட் செய்கிறது. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸில் டேவிட் மில்லர் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக அணியில் கேன் வில்லியம்சன் சேர்க்கப்பட்டார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் விருத்திமான் சாஹா கலமிறங்கினர். விருத்திமான் சாஹா 13 பந்தில் 11 ரன்கள் சேர்த்த நிலையில் ரபாடா பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 8வது ஓவரில் 22 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்த நிலையில் கேன் வில்லியம்சன் தனது விக்கெட்டினை ஹர்ப்ரீத் பிரார் பந்தில் இழந்தார். 10 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் சேர்த்தது.