GT Vs PBKS | பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சு தேர்வு!
18வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று(மார்ச்25) சும்பன் கில் தலைமையிலான குஜராத் அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்tடியில் டாஸ் வென்ற குஜராத் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
பஞ்சாப் அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), பிரியாஞ்ச் ஆர்யா, , சஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோயினிஸ், கிளென் மேக்ஸ்வெல், சூர்யாஞ்ச் ஷெட்கே, அஸ்மத்துல்லா ஓமர்சாய், மார்கோ யான்சன், அர்ஷ்தீப் சிங், சஹல் ஆகியோர் விளையாட உள்ளனர். மேலும் இம்பேக்ட் பிளேர்களுக்கான மாற்று வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
அதே போல் குஜராத் அணியில், ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், ஷாருக் கான், ராகுல் டிவாட்டியா, சாய் கிஷோர், அர்ஷத் கான், ரஷீத் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் விளையாடவுள்ளனர். இதிலும் இம்பேக்ட் பிளேர்களுக்கான மாற்று வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். போட்டின்போது இம்பேக்ட் பிளேர்கள் தங்களது அணியில் இடம்பெறுவார்கள்.