GT Vs PBKS | அதிரடி காட்டிய கேப்டன் ஷ்ரேயாஸ், குஜராத் அணிக்கு 244 ரன்கள் இலக்கு!
18வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று(மார்ச்25) சும்பன் கில் தலைமையிலான குஜராத் அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸை தொடங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டகாரர்களாக பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களமிறங்கினர். இதில் பிரப்சிம்ரன் சிங் 5 ரன்களில் விக்கெட்டை பறி கொடுக்க பிரியாஞ்ச் ஆர்யா நிதானமாக ஆடி 47 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கியங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் அணியின் பந்து வீச்சை, அதிரடியாக எதிர்கொண்டு 97 ரன்கள் குவித்தார். இதற்கிடையில் அஸ்மத்துல்லா ஓமர்சாய் 16 ரன்களும், ஸ்டோயினிஸ் 20 ரன்களும் அடித்தனர். கிளென் மேக்ஸ்வெல் டக் அவுட் ஆனார். அதன் பின்பு களத்திற்கு வந்த சஷாங்க் சிங் 44* ரன்கள் அடித்திருந்தார். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்களை பஞ்சாப் அணி எடுத்தது. குஜராத் அணியில் சாய் கிஷோர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து தொடர்ந்து குஜராத் அணி 244 என்ற இலக்கை சேஸிங் செய்து வருகிறது.