Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

GST வரி அதிரடி குறைப்பு ..... எந்தெந்த பொருட்களின் விலை குறையும்?

வீட்டு உபயோகப் பொருட்கள், சாமானிய மக்களுக்கான பொருட்கள் அனைத்தும் 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளன.
07:59 AM Sep 04, 2025 IST | Web Editor
வீட்டு உபயோகப் பொருட்கள், சாமானிய மக்களுக்கான பொருட்கள் அனைத்தும் 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளன.
Advertisement

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று தொடங்கி நடைபெற்றது. இதில், அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் பங்கேற்றனர். இந்த நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வரி குறைக்கப்பட்ட பொருட்கள்:

அதன்படி, வீட்டு உபயோகப் பொருட்கள், சாமானிய மக்களுக்கான பொருட்கள் அனைத்தும் 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளன. ஹேர் ஆயில், ஷாம்பு, பற்பசை மற்றும் பல் ஃப்ளாஸ் போன்ற தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான பால் புட்டி, நாப்கின், மருத்துவ டயப்பர்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5% ஆகவும், வெண்ணெய், நெய், பால் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி 12%லிருந்து 5% ஆகவும், நொறுக்குதீனிகளுக்கான வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தையல் இயந்திரம் மற்றும் அதற்கான உதிரி பாகங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5% ஆகவும், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள், வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏசி, டிவி மற்றும் கார் உள்ளிட்டவற்றிற்கு வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகவும், குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவத்துறையில், தெர்மோமீட்டர், மருத்துவ ஆக்ஸிஜன், பரிசோதனைப் பொருள்கள், கண்ணாடி மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

வரி உயர்த்தப்பட்ட பொருட்கள்:

கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள், எஸ்.யு.வி. ரக கார்கள், சொகுசு கார்கள், தனிநபர்களுக்கான விமானங்கள் உள்ளிட்டவற்றுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும். புகையிலை, பான் மசாலா, சிகரெட் ஆகியவற்றின் மீதும் 40 விழுக்காடு வரி விதிக்கப்படுகிறது.

மறுசீரமைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதத்துக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 12 சதவீதத்திற்கு கீழ் வரி விதிக்கப்பட்டிருந்த 99 சதவீத பொருள்கள் 5 சதவீதத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோல், 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருந்த 90 சதவீத பொருட்கள் 18 சதவீத வரி விதிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 353 பொருட்களின் விலை குறைய உள்ளது. 38 பொருட்களின் விலை அதிகரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
DelhiGSTGST TAXGSTCouncilNirmalaSitharamanreduced
Advertisement
Next Article