For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்!" - நிர்மலா சீதாராமனிடம் தங்கம் தென்னரசு கோரிக்கை!

09:11 PM Jun 22, 2024 IST | Web Editor
 சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்      நிர்மலா சீதாராமனிடம் தங்கம் தென்னரசு கோரிக்கை
Advertisement

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisement

2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 53-ஆவது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று(ஜூன் 22) நடைபெற்றது. மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுக்கொண்ட பின் அவரது தலைமையில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் முதல் ஆலோசனை கூட்டம் இதுவாகும்.

முன்னதாக, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதியமைச்சர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமையேற்ற நிர்மலா சீதாராமன், நிதிநிலை அறிக்கை தொடர்பாக மாநில அரசுகளின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் அவர் கேட்டறிந்தார். அதில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படியுங்கள் : சூப்பர் 8 சுற்று – இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சு தேர்வு!

ஜிஎஸ்டி கவுன்சிலின் 52வது ஆலோசனைக் கூட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வுத் தொகை, ஜிஎஸ்டி நிவாரணத் தொகையில் விடுபட்டுள்ள நிலுவைத் தொகை ஆகியவற்றை மத்திய அரசு உரிய நேரத்தில் விடுவிக்குமென நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.

மாநிலங்களுக்கு 'முதலீடுகளுக்கான சிறப்பு உதவித் திட்டத்தின்' கீழ் மத்திய அரசால் மாநிலங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படுவதை மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ளவும் இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலீடுகளுக்கான சிறப்பு உதவித் திட்டத்தை பெரும்பாலான மநிலங்கள் வரவேற்றுள்ள நிலையில், இத்திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாடுகளையும் பரிந்துரைத்துள்ளன. மேலும், பிரதமரின் வீடு கட்டித் தரும் திட்டத்தில் மத்திய அரசின் தரப்பிலிருந்து வழங்கப்படும் நிதியை ரூ. 1.2 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக அதிகரித்து வழங்கவும் மாநில அரசுகள் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement