Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜிஎஸ்டி வரி அல்ல... வழிப்பறி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!

02:34 PM Apr 15, 2024 IST | Web Editor
Advertisement

இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல என்றும்,  ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் பிரதமர் மோடி புளுகுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டிற்கு போதிய நிதி பகிர்வு அளிக்காமல் மத்திய அரசு பாராமுகம் காட்டுவதாக ஆளும் தி.மு.க விமர்சித்து வருகிறது.  முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் தனது தேர்தல் பிரசாராத்தில் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.

இந்த நிலையில்,  தனது எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக பதிவிட்டிருப்பதாவது: 

"தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்" என்று முதலமைச்சராக  இருந்த போது எதிர்த்த நரேந்திர மோடி,  பிரதமரானதும்,  "ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்'' என்று 'ஒரே நாடு ஒரே வரி' கொண்டு வந்தார்.  ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால்,  பில்-இல் உள்ள ஜி.எஸ்.டி-யைப் பார்த்து புலம்புகின்றனர்! அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜி.எஸ்.டி கட்ட வேண்டுமா? 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.  33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகிறது.  வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது.  இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்.  ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags :
BJPCM MK StalinCMO TAMIL NADUElection2024GST TAXPMO India PM Narendra modi
Advertisement
Next Article