GST வசூல் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சம்!
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாதனாக தகவல் வெளியாகியுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரியில் நாடு புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடுப்பட்டுள்ள அறிவிப்பில் “இதுவரை இல்லாத சாதனை அளவாக, 2024 ஏப்ரல் மாதத்தில் ரூ 2.10 லட்சம் கோடி சரக்கு, சேவை வரி வசூலாகி உள்ளது. ஏப்ரல் 2024க்கான நிகர ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.92 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், நிகர வருவாய் (திரும்பப் பெற்ற பிறகு) 17.1 சதவீத வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.
வசூலிக்கப்பட்ட வரி விவரங்கள்:
மத்திய சரக்கு மற்றும் சேவை வரி - ரூ.43,846 கோடி
மாநில சரக்கு மற்றும் சேவை வரி - ரூ.53,538 கோடி
ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி - ரூ.99,623 கோடி (இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் கிடைக்கப்பெற்ற ரூ 37,826 கோடி உட்பட)
செஸ் வரி - ரூ.13,260 கோடி (இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் கிடைக்கப்பெற்ற ரூ 1,008 கோடி உட்பட)
இந்நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ. 2.10 லட்சம் கோடியை கடந்தது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.