Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குருப் தேர்வுகளின் முடிவுகள் பிப்ரவரி மாதத்திற்குள் வெளியாகும் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

10:02 PM Jan 04, 2024 IST | Web Editor
Advertisement

குருப் 1, 2 உள்ளிட்ட 15 தேர்வுகளின் முடிவுகள் பிப்ரவரி மாதத்திற்குள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 

Advertisement

அதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப் 2 மற்றும் 2 ஏ பணிகளில் 5777 இடங்களை நிரப்ப உள்ளது.  அதற்கான முதல்நிலைத் தேர்வு 2022 மே 21 ஆம் தேதி நடத்தப்பட்டது.  அதன் முடிவுகள் 2022 ஜீன் மாதம் வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து முதன்மை எழுத்துத் தேர்வு 2023 பிப்ரவரி 25 ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் முடிவுகள் ஜனவரி மாதம் 12-ம் தேதி வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.  அதேபோல 95 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  சோனியா காந்தி, ராகுலுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!

பள்ளிக்கல்வித்துறையில் 11 மாவட்டக் கல்வி அலுவலர் பணிக்கான முதல்நிலைத் தேர்வு 2023 ஏப்ரல் மாதம் 20 ந் தேதி நடத்தப்பட்டு, மே மாதம் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. முதன்மைத் தேர்வுகள் 2023 நவம்பர் 21, 22 தேதிகளில் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும்.

முதன்மை வனக்காவலர் பணி குருப் 1 நிலையில் 9 பேர் நியமனம் செய்வதற்கான முதன்மைத் தேர்வு அக்டோபர் 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் ஜனவரி மாதம் வெளியிடப்படும்.

மாவட்ட உரிமையியல் நீதிபதி பணியில் 245 பேர் நியமனம் செய்வதற்கான முதன்மைத் தேர்வு 2023 நவம்பர் 4,5 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் ஜனவரி மாதம் வெளியிடப்படும்.

Tags :
news7 tamilNews7 Tamil Updatesresulttamil naduTN GovtTNPSC
Advertisement
Next Article