For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குரூப் 4 தேர்வு - டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!

குரூப் 4 தேர்வு ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
10:44 AM Apr 25, 2025 IST | Web Editor
குரூப் 4 தேர்வு   டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Advertisement

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களின் இருக்கும் அடிப்படை பதவிகள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.

Advertisement

இதனிடையே 2025ம் ஆண்டு குரூப் 4 தேர்வு ஜூலை 13ம் தேதி நடக்கும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இது குறித்து முழு அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூலை 12 ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு எழுத விரும்புபவர்கள் இன்று முதல் அடுத்த மாதம் 24 ஆம் தேதி வரை இந்த தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குரூப் 4 தேர்வு மூலம் 3 ஆயிரத்து 935 பணியிடங்கள் நிரப்பபடும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு ஆகும்.

Tags :
Advertisement