For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குரூப் 4 தேர்வு - தமிழ் பாட வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து!

03:22 PM Jun 09, 2024 IST | Web Editor
குரூப் 4 தேர்வு   தமிழ் பாட வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து
Advertisement

குரூப் 4 தேர்வு தமிழ்நாடு முழுக்க இன்று நடைபெற்ற நிலையில்  தமிழ் பாட வினாக்கள் மட்டும் சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன.  அந்த வகையில் கிராம நிர்வாக அலுவலர்,  வனக் காப்பாளர், இளநிலை உதவியாளர்,  தட்டச்சர் உட்பட குரூப் 4 பதவிகளில் வரும் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜனவரியில் வெளியிட்டது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஜன.30-ம் தேதி தொடங்கி பிப். 28-ம் தேதி வரை நடைபெற்றது.   தமிழ் தகுதித் தாள் 100,  பொது அறிவுத் தாள் 100 என மொத்தம் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.  இதில்,  தமிழ் தகுதித்தாள் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் மட்டுமே பாடம் சார்ந்த மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பல தேர்வு மையங்களில் குரூப் 4 எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.  இந்த தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய நிலையில், மதியம் 12.30 மணி வரை நடைபெரும்.   6,244 காலி இடங்களுக்காக நடத்தப்படும், இத்தேர்வை சுமார் 20 லட்சத்திற்கு மேற்பட்டோர்  எழுதுகின்றனர்.

இந்த நிலையில்,  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் இந்த ஆண்டு முதல் முறையாக ' இன்வேலிட் (Invalid) மதிப்பெண்'  அறிவிக்கப்பட்டுள்ளது.   அதாவது, பதில்களை தேர்வு செய்யும் முறையில் ஒரே கேள்விக்கு தவறான பதிலை முதலில் தேர்வு செய்துவிட்டு,  அதை அடித்து பின்னர் வேறொரு பதிலை பதிவிட்டால் அந்த கேள்விக்கான மதிப்பெண் இன்வேலிட் ஆகிவிடும்.

ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப்படும் A, B, C, D , E ஆப்சன்களில் D வரையான ஆப்ஷனில் பதில் எது என்று தெரியவில்லை என்றால் E என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும் என்றும்  கட்டாயம் ஏதாவது ஒரு கட்டத்தை நிரப்பி இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒரு கேள்விக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆப்ஷன்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தால்,  E ஆப்சன் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் மதிப்பெண் இன்வெலிட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் குரூப் 4 தேர்வினை தமிழகம் முழுவதும் 20,36,774 பேர் எழுதினர். சென்னையில் 432 தேர்வு மையங்களில் 1,33,276 பேர் தேர்வு எழுதுகினர்.  இவர்களில் 8,17,702 பேர் ஆண்கள், 12 லட்சத்து 18 ஆயிரத்து 922 பெண்கள் மற்றும் 150 பேர் மாற்று
பாலினத்தவர்கள் எழுதுவதாக தெரிவிக்கப்பட்டது.

இன்று நடைபெற்ற குரூப் 4 தேர்வினை எழுதிய மாணவர்கள் அனைத்து வினாக்களும்
சுலபமாக இருந்ததாகவும், தமிழ் மொழி வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாகவும்
தெரிவித்தனர், முறையாக  ஆறு மாதம் இதற்காக செலவிட்டு படித்தாலே இதனை
சுலபமாக எழுதி வெற்றி பெறலாம் என மாணவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags :
Advertisement