Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜூலை 13-ம் தேதி குரூப் 1 தேர்வு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!!

12:07 PM Mar 28, 2024 IST | Jeni
Advertisement

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13-ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வுகள் மூலம் ஆட்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.

இதையும் படியுங்கள் : புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: ரூ.50,000 கடந்து விற்பனை!

தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வு (குரூப்-1 சேவைகள்) உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்கான தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் -1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று முதல் ஏப்ரல் 27-ம் தேதி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 90 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வர்கள் ஆன்லைன் மூலம் https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
examGroup1notificationTNPSC
Advertisement
Next Article