Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"எல்லை பாதுகாப்பு படைக்கு எழுச்சி தின வாழ்த்துகள்" - #PMModi பதிவு

12:34 PM Dec 01, 2024 IST | Web Editor
Advertisement

எல்லை பாதுகாப்பு படையின் எழுச்சி தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்தியாவின் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வரும் 'எல்லை பாதுகாப்பு படை'(BSF) சுமார் 2.65 லட்சம் வீரர்களுடன் உலகின் மிகப்பெரிய எல்லை காவல் படையாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ம் தேதி எல்லை பாதுகாப்பு படையின் எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள் : #Fengal புயல் எதிரொலி – புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளை முகாம்களாக மாற்ற உத்தரவு!

இந்த நிலையில், இன்று (டிச.1) எல்லை பாதுகாப்பு படையின் எழுச்சி தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

"எல்லை பாதுகாப்பு படைக்கு எழுச்சி தின வாழ்த்துகள். தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் இணையற்ற சேவை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முக்கியமான தற்காப்பு அமைப்பாக எல்லை பாதுகாப்பு படை உள்ளது. அவர்களின் விழிப்புணர்வும், தைரியமும் நமது தேசத்தின் பாதுகாப்பிற்கு பங்களிக்கின்றன"

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article