For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

AI தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சி... பேடிஎம் நிறுவனத்தில் வேலை இழந்த 1000 ஊழியர்கள்...

08:35 PM Dec 25, 2023 IST | Web Editor
ai தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சி    பேடிஎம் நிறுவனத்தில் வேலை இழந்த 1000 ஊழியர்கள்
Advertisement

ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பேடிஎம் நிறுவனம், பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisement

உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாட்ஜிபிடியை தொடர்ந்து பல்வேறு ஏஐ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதை பயன்படுத்துவோரின் எண்ணிகை அதிகரித்து வருகிறது. ஏஐ தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மக்களின் வேலைகளை கூட பறிக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்நிலையில், பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் 1000 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. இதுகுறித்து பேடிஎம் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,

“ஆட்குறைப்பு நடவடிக்கை காரணமாக 1000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது பல நிறுவனங்கள் தங்கள் வேலைகளுக்கு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கி உள்ளன. ஒரே வேலையை செய்யும் பணிகளில் இருக்கும் நபர்களை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆட்குறைப்பின் மூலம் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஊழியர்களின் செலவினத்தில் 10 முதல் 15% சேமிக்க முடிகிறது. நாங்கள் எதிர்பார்த்ததை விட ஏஐ தொழில்நுட்பம் இந்தளவுக்கு பலனைத் தரும் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஏஐ தொழில்நுட்பம் வேறு எந்த துறைக்கும் பயன்படும் என்பதை ஆய்வு செய்து, அதில் இருக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளோம்” என்றார்.

மேலும் பணிநீக்கம் நடவடிக்கை தொடரும் என்று கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டில் 700 பேரை பணிநீக்கம் செய்தது பேடிஎம் நிறுவனம். அதே நேரத்தில், பேடிஎம் நிறுவனம்  அதிக வணிகர்களைப் பெற 15,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும், அடுத்த நிதியாண்டில், பேடிஎமில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை உயர்த்துவதே அந்நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும்,  ஏ.ஐ. தொழில்நுட்பத்தால், கூகுள் நிறுவனத்தில் 30 ஆயிரம் பணியாளர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Tags :
Advertisement