மானியக் கோரிக்கை விவாதம் : பள்ளிக் கல்வித் துறையின் முக்கிய அறிவிப்புகள்!
தமிழ்நாடு சட்டபேரவையில் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வரும் நிலையில், பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது..
1. அரசுப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களைத் தரம் உயர்த்துதல்:
அரசுப் பள்ளி மாணவர்கள் கணினித் தொழில்நுட்பம் மற்றும் குறியீடுகளை நடைமுறைப் பயிற்சியின் மூலம் கற்றுத்தேர்வதற்கு அரசு உயர்நிலை மற்றும் செயல்பட்டுவரும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப படிப்படியாகத் தரம் உயர்த்தப்படும். முதற்கட்டமாக 2024-2025 ஆம் கல்வியாண்டில் 1000 மாணவர்களுக்கு மேல் பயின்றுவரும் அரசுப் பள்ளிகளில் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.58 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.
2. பாரத சாரண சாரணிய இயக்கத்தின் வைரவிழா :
பாரத சாரண சாரணிய இயக்கத்தின் பொன்விழாக் கொண்டாட்டம் 2000 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்றது. அப்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இவ்வாண்டு பாரத சாரண சாரணிய இயக்கத்தின் வைர விழா ஆண்டாகும். இதனையொட்டி, தேசிய அளவிலான முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு வைர விழா ஜாம்போரி (Diamond Jubilee National Jamboree) ரூ.10 கோடி மதிப்பீட்டில் நடத்தப்படும்.
3. காலநிலை மாற்றம் பாதுகாப்புக் கல்வி சுற்றுச்சூழல்
இயற்கையோடு இணைந்து மாணவர்களை இயற்கைச் சூழலை நேசிக்கச் செய்வதன் மூலம் காலநிலை நெருக்கடி மற்றும் பல்லுயிர் இழப்பு போன்ற தீர்க்கமாக உலகளாவிய பிரச்சினைகளைத் அறிந்து அதற்கான தீர்வுகளை மாணவர்களே கண்டறியும் வகையில் உரிய பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டம் ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
4. ஆளுமைத் திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகள்
அனைத்துப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் பெயர்களில் மாணவர் குழுக்கள் அமைத்து, மாணவத் தலைவர் மற்றும் மாணவ அமைச்சர்கள் தெரிவு செய்யப்படுவர். இதன்மூலம் மாணவர்களிடையே அரசியல் அறிவு சார்ந்த அனுபவங்கள் மற்றும் ஆளுமைத் திறன் மேம்பட, மாதிரி சட்டமன்றம் மற்றும் மாதிரி பாராளுமன்றம் நடத்தப்படும். இதற்காக தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும். இத்திட்டம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
5. 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படைக் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் திறன்
வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாணவர்களைத் தயார் செய்வதற்காகவும் அவர்களது கற்றல் அடைவினைக் கணினி வழி மதிப்பிடுவதற்காகவும் உயர்தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வருகின்றன. மேலும், மாணவர்களுக்குக் கணினிசார் அடிப்படை அறிவியலையும், செயற்கை நுண்ணறிவுத் திறன் மற்றும் அதனைப் பயன்படுத்தும் நுட்ப அறிவியலையும் கற்பிக்கும் வண்ணம் பாடத்திட்டம் தயார் செய்து ஆசிரியர்களுக்குப் பயிற்சியும், மாணவர்களுக்கு மென்பொருள் மற்றும் செயற்கை (Artificial Intelligence) சார்ந்த அடிப்படைத் திறன்களும் கற்றுக் கொடுக்கப்படும்.
6. அரசு உதவி பெறும் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள்
அரசுப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இவ்வாண்டு அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ரூ.42 கோடி செலவில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
7. எந்திரனியல் ஆய்வகங்கள் (Robotics Labs)
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை வளர்க்கவும், குழுவாக இணைந்து செயல்படக்கூடிய திறனைக் கற்றுக் கொள்ளவும், படைப்பாற்றலை வளர்க்கவும் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்ற அளவில் 38 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் எந்திரனியல் ஆய்வகம் (Robotics Lab) ரூ.15.43 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
8. பல்வகைத் திறன் பூங்கா (Multi-Sensory Park)
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் புலன் உணர்வுத்திறன், அறிவுத்திறன், பெருந்தசை இயக்கத்திறன் மற்றும் நுண்தசை இயக்கத்திறன் ஆகியவை மேம்படுவதற்காக, அவர்களின் பல்வகைப் புலன்கள் தூண்டப்பட்டு விளையாட்டு வாயிலாகக் கற்றல் அனுபவங்களைப் பெறத்தக்க வகையில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு "பல்வகைத் திறன் பூங்கா" என 38 மாவட்டங்களில் ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
9. அகல் விளக்கு
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எந்தவித இடர்பாடும் இன்றித் தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரியும் பொருட்டு அவர்களுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஏற்படும் இடையூறுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், இணையதளப் பயன்பாடுகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்து வழிகாட்டுதல் ஆசிரியைகளைக் அமைக்கப்படும். வழங்கவும் கொண்ட குழுக்கள் இவர்களுக்குப் பயிற்சி வழங்குவதற்கு அகல் விளக்கு " எனும் திட்டம் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
10. கலைத் திருவிழா - தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவாக்கம்
6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களின் கலைத் திறனை வெளிப்படுத்தும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து இக்கல்வியாண்டு முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் பங்கேற்கும் வகையில் கலைத் திருவிழா நடத்தப்படும்.
11. உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் செலவினை ஏற்றல்
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று, நம் நாட்டில் செயல்பட்டு வரும் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் செலவினை அரசே ஏற்றுக்கொள்ளும். கல்விச் மேலும், அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகை பெற்றுச் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் அக்கல்வி நிறுவனத்தில் சேர்வதற்காகச் செல்லும் முதல் பயணத் தொகை முழுவதையும் இவ்வரசே ஏற்றுக்கொள்ளும். இதற்கென ஆண்டுதோறும் ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
12. தமிழ்நாடு தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
நம்ம School நம்ம ஊரு பள்ளி" திட்டத்தின் வாயிலாகத் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளுக்குப் பங்களிப்புகளைத் திரட்டுவதற்கும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கும் தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்துடன் (ICTACT) புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) மேற்கொள்ளப்படும்.
13. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தைத் தகைசால் நிறுவனமாகத் தரம் உயர்த்துதல்
திருச்சிராப்பள்ளி, மதுரை, ஈரோடு, புதுக்கோட்டை, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய ஆறு மாவட்டங்களில் செயல்பட்டுவரும் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் ரூ.41.63கோடி மதிப்பீட்டில் தகைசால் நிறுவனங்களாகத் தரம் உயர்த்தப்படும்.
14. ஆசிரியர்களுக்குத் திறன்வளர் பயிற்சி
நேர்த்தியான கற்பித்தல் அணுகுமுறைகளை வகுப்பறையில் செயல்படுத்துபவராக, பங்களிப்பும் கொண்ட ஏதுவாளராக, ஈடுபாடும் சிறந்த ஆலோசகராக, படைப்பாற்றலில் மேம்பட்டவராக, கூர்சிந்தனை பெற்ற ஆராய்ச்சியாளராக, இவை அனைத்தையும் ஒருங்கே பெற்ற பன்முகத் திறமையாளராக ஆசிரியர்களை மேம்படுத்தும் வகையில் ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் திறன்வளர் பயிற்சி வழங்கப்படும்.
15. ஆசிரியர்களுக்குத் தொல்லியல் பயிற்சி
தமிழர் நாகரிகம், பண்பாடு, தொன்மையின் சிறப்பு மற்றும் தமிழகமெங்கும் விரவியிருக்கும் தொல்லியல் தலங்கள் குறித்த தகவல்களை மாணவர்களுக்குச் சிறப்பாகக் கொண்டு சேர்க்கும் வண்ணம் 1000 ஆசிரியர்களுக்குத் தொல்லியல் சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டது. இவ்வாண்டில் இரண்டாம் கட்டமாக, மேலும் 1000 ஆசிரியர்களுக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் தொல்லியல் பயிற்சி வழங்கப்படும்.
16. மாணவர்களுக்கான நன்னெறிச் செயல்பாடுகள்
மாணவர்களின் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் பொருட்களைப் பயன்படுத்துதலை அறவே தவிர்க்க உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, உயர்கல்வித் துறை ஆகியவற்றுடன் சேர்ந்து கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்படும். இத்திட்டம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
17. தூத்துக்குடியில் மாவட்ட மைய நூலகத்திற்குப் புதிய கட்டடம்
தூத்துக்குடி மாவட்டத்தில் வாசகர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட மைய நூலகத்திற்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
18. பார்வைத் திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கான கணினி எழுத்துணரி மென்பொருள்
பார்வைத் திறன் குறைபாடுடைய மாணவர்கள் நலனுக்காக மாவட்ட மைய நூலகங்களில் கணினி மற்றும் எழுத்துணரி மென்பொருள் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
19. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறார் அறிவியல் பூங்கா
அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு வருகை தரும் சிறுவர்களின் அறிவியல் அறிவினை மேம்படுத்தும் வகையில் அறிவியல் சாதனங்கள் கொண்ட சிறார் அறிவியல் பூங்கா ரூ.80.24 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
20. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உதவியுடன் நூலகங்களுக்கான புதிய சேவைகள்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உதவியுடன் மொழிபெயர்ப்பு, நூல் சுருக்கம், மறுஉருவாக்கம், காணொளிகள் எழுத்தாக்கம் போன்ற புதிய சேவைகள் மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் முழுநேரக் கிளை நூலகங்களில் வாசகர்கள் பயன்பெறும் வகையில், அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மூலம் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
21. சொந்த நூலகங்களுக்கு விருது
தமிழ்நாடு அரசு வீடுதோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்கள் அமைத்துச் சிறப்பாகப் பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களைக் கண்டறிந்து ஊக்குவிக்க ரூ.1.14 இலட்சம் மதிப்பீட்டில் சொந்த நூலகங்களுக்கான விருது வழங்கப்படும்.
22. "திசைதோறும் திராவிடம்" திட்ட விரிவாக்கம்
தமிழ் இலக்கியம், தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் பண்பாட்டை எடுத்துக்காட்டும் நூல்களை ஆங்கிலம் மற்றும் தென்னிந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பதற்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் "திசைதோறும் திராவிடம்" என்ற திட்டம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் பிற இந்திய மொழிகள் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
23. மிளிரும் தமிழ்நாடு
தமிழ்நாட்டின் பண்பாடு, கட்டடக்கலை, சிற்பக்கலை, நாட்டுப்புறக் கலைகள், தனித்துவமான 2일 வகைகள், புவிசார் குறியீடுகள் போன்றவற்றை உள்ளடக்கிய புகைப்பட ஓவிய நூல்கள் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் "மிளிரும் தமிழ்நாடு" என்ற பெயரில் பரிசுப் பதிப்புகளாக வெளியிடப்படும்.
24. பட்டயக் கணக்காளர் தேர்வு நூல்கள்
வணிகவியல் மற்றும் கணக்கியல் பாடங்களைப் பயிலும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் பட்டயக்கணக்காளர் அடிப்படைத் தேர்வுக்கான நூல்கள் தமிழ் கலைச் சொற்களோடு கூடிய வெளியீடாக ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும்.
25. பாடநூல் கழக நூல்களின் விற்பனையை இணைய வழியில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் விரிவுபடுத்துதல்
இணையதள மேம்பாடு மற்றும் விற்பனை முகவர்கள் மூலமாக தேசிய மற்றும் சர்வதேச அளவில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகப் புத்தகங்களை விற்பனை செய்திட ஏதுவாக விற்பனைக்கான இணைய தளம் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.