For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கிராமி விருதுகள் 2024 -  நிகழ்ச்சியின் தொகுப்பாளர் யார் தெரியுமா?

01:48 PM Dec 14, 2023 IST | Web Editor
கிராமி விருதுகள் 2024    நிகழ்ச்சியின் தொகுப்பாளர் யார் தெரியுமா
Advertisement

அமெரிக்காவில் நடைபெற உள்ள 2024 ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்வை, மேடை நகைச்சுவையாளரான டிரெவர் நோவா தொகுத்து வழங்க உள்ளார்.

Advertisement

இதனை தனது பாட்காஸ்ட்டில் பகிர்ந்துள்ள டிரெவர், நான்காவது முறையாக இந்த நிகழ்வில் தொகுப்பாளராகப் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2024 ஆம் ஆண்டுக்கான விருதுகள் பரிந்துரையில் 9 பிரிவுகளில் இடம்பெற்றுள்ளார் இசைக் கலைஞர் எஸ்சிஏ. 'கில் பில்' என்கிற அதிரடியான இசைத் தொகுப்பு, இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக சிறந்த இசைத் தொகுப்பு, பாடல் மற்றும் பாடல்பதிவு உள்ளிட்ட பிரிவுகளில் பரிந்துரையாகியுள்ளது.

இதையும் படியுங்கள் : மக்களவைக்குள் வீசப்பட்ட புகை குப்பிகள் ஆபத்தானதா? – ஓம் பிர்லா விளக்கம்!

ஃபோப் பிரிட்ஜர்ஸ், டெய்லர் ஸ்விஃப்ட், ஒலிவியா ரோட்ரிகோ, பில்லி ஐலீஷ் என பல இசைக்கலைஞர்கள் 6 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 2024, பிப்.4 அன்று கிராமி விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement