இந்தியாவுக்கு 'கிராமி' விருது மழை பொழிகிறது- ஏ.ஆர்.ரஹ்மான் பெருமிதம்!
04:29 PM Feb 05, 2024 IST
|
Web Editor
இந்த விழாவில் சிறந்த ஆல்பத்திற்கான பிரிவில், இந்தியாவைச் சேர்ந்த சக்தி இசைக் குழுவின் ‘This Moment’ என்ற ஆல்பம் கிராமி விருதை வென்றுள்ளது. இந்த இசைக்குழுவில் இடம்பெற்றுள்ள பாடகர் சங்கர் மகாதேவன், இசையமைப்பாளர் செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், உஸ்தாத் ஜாகீர் உசேன் ஆகியோர் விருதை பெற்றனர்.
Advertisement
'கிராமி' விருது வென்ற இந்தியாவைச் சேர்ந்த சக்தி இசைக்குழுவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டியுள்ளார்.
Advertisement
உலகெங்கும் உள்ள இசைக் கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக, அமெரிக்காவின் ‘தி ரெக்கார்டிங் அகாடமி’ என்ற அமைப்பு ஆண்டுதோறும் ‘கிராமி விருதுகள்’ வழங்கி வருகிறது. இந்த விழாவில் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் இந்தாண்டு 66-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான், மூவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, “இந்தியாவுக்கு கிராமி மழை பொழிகிறது” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், உஸ்தாத் ஜாகீர் உசேனுக்கு இது மூன்றாவது கிராமி விருது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Article