"GPT-3.5 இந்திய கிராமப்புற விவசாயிக்கும் உதவியுள்ளது" - சத்யா நாதெல்லா நெகிழ்ச்சி!
GPT-3.5 ஐ பயன்படுத்திய ஒரு கிராமப்புற இந்திய விவசாயியை நான் சந்தித்தேன். இது தனக்கு கிடைத்த அற்புதமான தருணம் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆண்டுதோறும் மாநாடு நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான மைக்ரோசாப்டின் பில்ட் 2024 மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் செயற்கை நுண்ணறிவிலின் மிகப்பெரிய முன்னேற்றங்களை வெளிப்படுத்தினர்.
இதில் மைக்ரோசாப்டின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா கலந்து கொண்டு பேசினார். அப்பொது பேசிய அவர், தொழில்நுட்பத்தால் மாற்றப்பட்ட ஒரு இந்திய விவசாயியைப் பற்றிய வித்தியாசமான கதையுடன் அவரது உரையை பேசினார். Azure மற்றும் Copilot இன் மேம்பாடுகள் மற்றும் Open AI போன்ற மைக்ரோசாப்ட் ஆதரவு நிறுவனங்களின் முன்னேற்றங்கள் போன்ற பெரிய அறிவிப்புகளை வெளிப்படுத்தி பேசினார்.
இதையும் படியுங்கள் : "பிரதமர் மோடி இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வரப் பார்க்கிறார்" - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு!
அப்போது அவர் கூறியதாவது :
"ஜனவரி 2023ம் ஆண்டு, GPT-3.5 ஐ பயன்படுத்திய ஒரு கிராமப்புற இந்திய விவசாயியை நான் சந்தித்தேன். அவர் தொலைக்காட்சியில் கேட்ட அரசாங்கம் வழங்கியுள்ள மானியங்களைப் பற்றிப் புரிந்து கொள்ள GPT - 3.5 ஐ பயன்படுத்தி உள்ளார். இது எனக்கு கிடைத்த அற்புதமான தருணம். அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் உருவாக்கப்பட்ட ஒரு அதிநவீன மாதிரியின் நம்பமுடியாத தாக்கம், இப்போது இந்தியாவில் ஒரு கிராமப்புற விவசாயியின் வாழ்க்கையை நேரடியாக மேம்படுத்த உதவியது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.