For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அரசு மரியாதையுடன் "தகைசால் தமிழர்" சங்கரய்யாவின் இறுதிச்சடங்கு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

12:25 PM Nov 15, 2023 IST | Web Editor
அரசு மரியாதையுடன்  தகைசால் தமிழர்  சங்கரய்யாவின் இறுதிச்சடங்கு  முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement

மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

Advertisement

சுதந்திரப் போராட்ட தியாகியும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான  சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 13-ந் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில்,  சங்கரய்யா இன்று காலை 9.30 மணியளவில் காலமானார்.  சங்கரய்யாவின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மதியம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  சங்கரய்யாவின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அரசியல் வட்டாரங்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும்,  இளைஞர்களும் சமூகவலைத்தளங்கள் மூலமாக மறைந்த என்.சங்கரய்யாவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மருத்துவமனையிலிருந்து குரோம்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு உடல் எடுத்து செல்லப்பட்டது.  இதையடுத்து இன்று பிற்பகல் 3 மணிக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு சங்கரய்யா உடல் கொண்டு செல்லப்படவுள்ளது.  இதனையடுத்து நாளை சங்கரய்யா உடலுக்கு நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில், மறைந்த முதுபெரும் தலைவர் சங்கரய்யாவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  அரசு மரியாதையுடன் சங்கரய்யாவின் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

Advertisement