Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆளுநர் விவகாரம்: தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்!

08:38 PM Dec 12, 2023 IST | Web Editor
Advertisement

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், மசோதாக்களை, ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு கோரியுள்ளது.

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார். இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தப்பட்டு ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. மேலும் அந்த மசோதாக்கள் மீண்டும் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு கடந்த நவ.18-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்த மனுக்கள் கடந்த நவ. 19-ம் தேதி குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பிவைத்தார். ஆனால் காலத்தை வீணடிப்பதற்காகவே ஆளுநர் இவ்வாறான காரியங்களில் ஈடுபடுகிறார் என திமுக பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில் நாளை ஆளுநருக்கு எதிரான வழக்கு மறுவிசாரணைக்கு வரும்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், கடந்த நவம்பர் 18-ம் தேதி சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்களை, ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் எனவும், தற்போது நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
CMO TamilNaduGovernorMK StalinNews7Tamilnews7TamilUpdatesRN RaviSupreme courtTN Govt
Advertisement
Next Article