For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அய்யா வைகுண்டர் குறித்த பேச்சு: ஆளுநருக்கு பாலபிரஜாபதி அடிகளார் கண்டனம்...

01:19 PM Mar 05, 2024 IST | Web Editor
அய்யா வைகுண்டர் குறித்த பேச்சு  ஆளுநருக்கு பாலபிரஜாபதி அடிகளார் கண்டனம்
Advertisement

அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி புரிந்து பேச வேண்டும் என சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் தலைமை பதி குருவான பாலபிரஜாபதி அடிகளார் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

Advertisement

அய்யா வைகுண்டரின் 192வது அவதார தின விழா மற்றும் வைகுண்டசுவாமி அருளிய சனாதான வரலாற்று புத்தக வெளியீட்டு விழா சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று (மார்ச்.04) நடைபெற்றது.  நூலினை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டு உரையாற்றினார்.  அப்போது அவர் அய்யா வைகுண்டர் குறித்தும் சனாதனம் குறித்தும் பேசினார்.

இது தொடர்பாக,  சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் தலைமை பதி குருவான பாலபிரஜாபதி அடிகளார் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவது போல் வரலாற்றை திரித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுயுள்ளது வருந்ததக்கது.   அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநர் புரிந்து பேச வேண்டும்.  உருவ வழிபாடு,  பூஜை புனஸ்காரங்கள் மொழி பேதம்,  ஆண் பெண் பேதம், சாதிகள் இல்லை என பல கோட்படுகளை கூறியவர் அய்யா வைகுண்டர்.

அவர் நாராயணன் அவதாரம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுகிறார்.  ஆனால் எல்லா புராணங்களிலும் வரலாறு திரிக்கப்பட்டுள்ளது என்று கூறியவர் அய்யா வைகுண்டர். ஆளுநர் தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு ஆலோசனைகள் கூறுவதை விட்டு அய்யா வைகுண்டரை பற்றியும் சனாதானத்தை பற்றியும் பேசுவது அவரது வேலை அல்ல."

இவ்வாறு பாலபிரஜாபதி அடிகளார் தெரிவித்தார்.

Tags :
Advertisement