திருவள்ளுவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ஆளுநர் #RNRavi!
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இரண்டாவது நாள், மாட்டுப் பொங்கல் திருநாளன்று, திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தும், அதன் முன்பு வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
மேலும், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"பாரதத்தின் தமிழ் போற்றும் திருவள்ளுவரை தேசம் ஆழ்ந்த நன்றியுடனும், மிகுந்த பயபக்தியுடனும் நினைவுகூர்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒவ்வொரு தனிநபருக்கும் அமைப்புக்கும் பொருந்தக்கூடிய ஒப்பற்ற வழிகாட்டியான திருக்குறளை வழங்கினார்.
பாரதத்தின் சனாதன நாகரிக மரபில், கடவுள் பக்தியின் உன்னதத்தையும், நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கையில் நன்னடத்தையின் ஆழத்தையும் அவர் நமக்குக் கற்றுக் கொடுத்தார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஒரு விரிவான நல்லொழுக்கக் குறியீட்டை அவர் வகுத்தார்.
The Nation remembers with profound gratitude and utmost reverence Thiruvalluvar, the Tamil patron saint of Bharat. Several thousand years ago he bequeathed us the unparalleled wisdom Tirukkural, the matchless guide for every individual and institution. In the Sanatan… pic.twitter.com/AMt58ZcLY5
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 15, 2025
இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடும் அதே வேளையில், அவர் நமது அன்றாட வழிகாட்டியாக விளங்கி வருகிறார். எனவே அவர் தினமும் நினைவுகூரப்பட்டு கொண்டாடப்பட வேண்டும். திருவள்ளுவரின் சிறந்த பக்தரான பிரதமர் மோடிக்கு நன்றி, திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன"
இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.