"அரசின் இடைக்கால பட்ஜெட் - மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள்!" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கலின் போது 2047-ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள் eன அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை இன்று (01.02.2024) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X தள பக்கத்தில் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அதன்படி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X தள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டை புறக்கணித்திருக்கிறார்கள். எவ்வளவு மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம் என்கிற அவர்களின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெருக்க - பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த - மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க எந்த திட்டங்களையும் அறிவிக்காமல், 2047-ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வல்லரசாவதற்கான இலக்கை தள்ளி வைத்துக் கொண்டே போவது மட்டும் தான் அவர்களின் சாதனை. இடைக்கால பட்ஜெட்டில் கைவிரித்தவர்கள், இனி எக்காலத்துக்கும் எழ முடியாத அளவுக்கு இந்திய மக்கள் வீழ்த்துவது உறுதி.
இவ்வாறு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகள் புறக்கணித்திருக்கிறார்கள். எவ்வளவு மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம் என்கிற அவர்களின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெருக்க - பண வீக்கத்தைக்…
— Udhay (@Udhaystalin) February 1, 2024