Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மூன்றாம் பாலினத்தவரின் கல்விச்செலவை அரசே ஏற்கும்" - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!

12:41 PM Feb 19, 2024 IST | Web Editor
Advertisement

மூன்றாம் பாலினத்தவரின் கல்விச்செலவை அரசே ஏற்கும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது. பட்ஜெட் கூட்டத்தில் பங்கெடுப்பதற்காக, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வருகை தந்தார்.  அவரை சந்தித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்து பெற்றார்.  அதன்பின், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையின் தொடக்கத்தில் காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை தொடங்கினார்.

அந்த உரையில், உயர்கல்வியைத் தொடர விரும்பும் மூன்றாம் பாலினத்தவரின் கல்விக் கட்டணம்,  விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும் என தெரிவித்தார்.   தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள்,  மாற்றுத்திறனாளிகள்,  மூன்றாம் பாலினத்தவர்கள் போன்ற 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கும் புதிய தொழில் நிறுவனங்களக்கு அவர்களின் ஊதியத்தில் 10 சதவீதம் ஊதிய மானியம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.  பணிபுரியும் மகளிரின் மழலைக் குழந்தைகளின் நலன் காக்க, அனைத்து சிப்காட் தொழிற்பேட்டைகளிலும் குழந்தைகள் காப்பகங்கள் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Tags :
AppavuBestCMBestBudgetBudgetBudget 2024GovernorspeakerTamil Nadu assemblyTamil Nadu Budget 2024Thangam thennarasuTN AssemblyTN Assembly 2024
Advertisement
Next Article