“மசோதாக்களில் இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து அரசு ஆராய வேண்டும்!” - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
மசோதாக்களில் இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து அரசு ஆராய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் பேசினார். ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளார். ரத்து செய்ததாக குறிப்பிடவில்லை. வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மசோதாக்களில் இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து அரசு ஆராய வேண்டும் எனக் கூறினார்.
அதற்கு பதிலளித்த சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பலாமா? மீண்டும் அனுப்பப்படவுள்ள 10 மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். 3 ஆண்டுகளுக்கு பிறகு மசோதாக்களை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் கூறுவதன் பின்னணியில் உள்நோக்கம் உள்ளது என பதிலளித்தார்.