Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பலத்த கைதட்டல்களை பெற்ற இடைத்தரகர் ஒருவரின் கேள்வி! ஒற்றை வரியில் பதில் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

08:48 PM May 16, 2024 IST | Web Editor
Advertisement

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இடைத்தரகர் ஒருவர்  எழுப்பிய கேள்வி பலத்த கைதட்டல்களை பெற்ற நிலையில், அதற்கு நிர்மலா சீதாராமன் கொடுத்த பதில் பேசு பொருளாகியுள்ளது. 

Advertisement

மும்பை பங்குச்சந்தை எக்ஸ்சேஞ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இடைத்தரகர் ஒருவர் எழுப்பிய கேள்வி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இடைத்தரகர் பேசியதாவது ;

ஒரு ஸ்டாக் மார்க்கெட் புரோக்கராக சில்லறை முதலீட்டாளர்களுக்கு நாங்கள் டிரேடிங் செய்கிறோம். CGST, IGST, Stamp Duty, STT, Long Term Capital Gain Tax என எண்ணற்ற வரிகளை சுமத்துகிறீர்கள். புரோக்கர்களை விடவே அதிகமாக இந்திய அரசு சம்பாதிக்கிறது. இதில் முதலீடு என்னுடையது. ரிஸ்க் என்னுடையது. ஆனால், முழு லாபத்தையும் அரசே எடுத்துக்கொள்கிறது. ரிஸ்க், ஊழியர்கள், பணம் என எல்லாவற்றையும் இதில் முதலீடு செய்யும் நான் இந்தத் தொழிலின் working Partner. நீங்கள் Sleeping Partner. இதுபற்றி உங்கள் கருத்து என்ன..?

அதுமட்டுமல்லாது மும்பையில் யாராவது வீடு வாங்க வேண்டும் என யோசித்தாலே அவர்களுக்கு தலை சுற்றிவிடும். என்னிடம் இருப்பது ஒயிட் மணி தான். நான் வரி கட்டுகிறேன். நான் எல்லாவற்றையும் செக் மூலம் கட்ட முடியும். என்னுடைய வங்கிக்கணக்கில் இருக்கும் ஒவ்வொரு ரூபாயிலும் ஏற்கெனவே வரி பிடித்தம் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், இப்போது நான் மீண்டும் Stamp Duty, GST எல்லாவற்றையும் மீண்டும் கட்ட வேண்டும். இது கிட்டத்தட்ட 11% வந்துவிடுகிறது. வருமானமே இல்லாத நான் இதில் என்ன செய்ய வேண்டும்..? எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “இதற்கு என்னிடம் பதில் இல்லை. Sleeping Partner இங்கே அமர்ந்துகொண்டு என்ன பதில் சொல்ல முடியும்” என சிரித்துகொண்டே பதிலளிக்க  மறுத்துள்ளார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags :
Central governmentNirmala sitharamanStock Brokerunion ministerViral
Advertisement
Next Article