Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் போராட்டம்...!

தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
03:46 PM Dec 04, 2025 IST | Web Editor
தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
Advertisement

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞருக்கு வேலை வழங்கிட வேண்டும், 21 மாத நிலுவை தொகையை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி, மதுரை, நாமக்கல், கடலூர், தேனி, திருவள்ளூர், தென்காசி உள்ளிட்ட தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் எராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி முழக்கங்களை எழுப்பினர்.

Advertisement

மேலும் போராட்ட காரர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.  இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Tags :
govermentworkerslatestNewsMadurainamakkalProtestTenkasiTheniTNnews
Advertisement
Next Article