போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை!
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் நலத்துறை போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கும் மண்டல மேலாண்இயக்குநர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்தம், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு பஞ்சப்படி வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தன.
இதையும் படியுங்கள் : கோரமண்டல் உர ஆலைக்கு எதிர்ப்பு – பொதுமக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக வியாபாரிகள் கடையடைப்பு!
முன்னதாக, இரண்டு கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து துறை சங்கங்களுக்கு நீதிமன்றம் பேச்சுவார்த்தை மூலம் சுமூக முடிவை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் வேலைநிறுத்தத்தை அறிவித்த ஏஐடிசி, சிஐடியு, எம்எல்எப், ஏ.டி.பி, ஐ. என்.டி.யுசி, உள்ளிட்ட 27 தொழிற்சங்கங்கள் மற்றும் 8 போக்குவரத்து மண்டல மேலாண் இயக்குநர்கள், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் முன்பு பேச்சுவார்த்தை மேற்கொள்ள கடிதம் ஆனது வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாளை (பிப் - 07) மாலை 3 மணி அளவில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்கள் மற்றும் மண்டல மேலாளர் இயக்குனர்கள் பங்கேற்று பேச்சுவார்த்தை சுமூகமாக முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.