QR குறியீட்டை ஸ்கேன் செய்தால் நலத்திட்டங்கள் பற்றி பேசும் முதலமைச்சர்… நாட்டிலேயே முதன்முறையாக புதிய முயற்சி!
09:51 AM Feb 01, 2024 IST
|
Web Editor
திமுக அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்கள், இளைஞர், மாணவர்கள் முன்னேற்றத்தில் அரசின் திட்டங்கள் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த திட்டங்களை மக்கள் அறிந்துக் கொண்டு பயன் பெறும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் வழியாக இந்த திட்டங்கள் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது.
Advertisement
தமிழ்நாடு அரசின் சாதனை விளம்பரங்கள் நாளிதழ்களில் QR குறியீடுகளுடன் வெளியாகியுள்ளது.
பார் குறியீடு தொழில் நுட்பம் போன்ற மற்றுமொரு தொழில் நுட்பமே QR Code. இது விரைவான பதில்(Quick Response) என்பதன் சுருக்கத்தையே குறிக்கின்றது. QR குறியீடு என்பது ஜப்பானிய மேட்ரிக்ஸ் பார்கோடின் பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரையாகும். இந்த தொழில் நுட்பம் ஜப்பானில் பரவலாகப் பயன் பாட்டிலுள்ளது. QR Code தொழில் நுட்பத்தில் ஒரு படத்தினுள் தகவல்கள் மறைக் குறியாக்கம் (encode) செய்யப் படுகின்றன.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மக்கள் நலன் சார்ந்த மகத்தான திட்டங்களை, தமிழ்நாடு முதலமைச்சர் வீடியோ பதிவு மூலம் மக்களிடம் தெரிவிக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், தற்போது தமிழ்நாடு அரசின் சாதனை விளம்பரங்கள் QR குறியீடுகளுடன் வெளியாகியுள்ளது. நாளிதழ்களில் உள்ள QR குறியீடுகளை அலைபேசியின் மூலமாக ஸ்கேன் செய்தால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காணொலியை காணும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது.
இதில் புதிய வியூகமாக, நாளிதழில் வரும் விளம்பரத்துடன் இடம் பெறும் QR CODE ஐ, அலைபேசி கொண்டு ஸ்கேன் செய்து, அரசின் திட்டங்கள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் பேசும் வீடியோ பதிவை பார்க்க முடியும். ஆகுமென்டட் ரியாலிட்டி (Augmented reality) தொழில்நுட்பம் மூலம் இந்த வீடியோ பதிவு வெளியிடப்படுகிறது.
Advertisement
Next Article