For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தன்னை பற்றி கிசுகிசு... நடிகை #SaiPallavi கண்டனம்!

09:59 AM Dec 12, 2024 IST | Web Editor
தன்னை பற்றி கிசுகிசு    நடிகை  saipallavi கண்டனம்
Advertisement

தன்னை பற்றி தவறான செய்தி ஒன்று வெளியான நிலையில் நடிகை சாய்பல்லவி அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை மையமாக வைத்து உருவாகும் திரைப்படம் ‘ராமாயணம்’. இத்திரைப்படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். கன்னட நடிகர் யாஷ் ராவணனாக நடித்து வருகிறார். மேலும், இந்த திரைப்படத்தில் அனுமானாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் உருவாகிறது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அதிலிருந்து சில புகைப்படங்கள் ஏற்கனவே வலைதளத்தில் கசிந்து வைரலாகின. இப்படத்தின் முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இந்த சூழலில், ராமாயணம் படத்தில் நடித்து வரும் சாய்பல்லவி படப்பிடிப்பு முடியும்வரை அசைவ உணவுகளை தவிர்ப்பதாகவும் இதற்காக அவர் ஹோட்டலில் கூட சாப்பிடாமல், வெளியூர்களுக்குச் செல்லும்போது கையோடு சமையல்காரர்களை அழைத்துச் செல்வதாகவும் தனியார் செய்தி நிறுவனத்தில் செய்தி ஒன்று வெளியாகியது.

https://twitter.com/Sai_Pallavi92/status/1866888819292901507

இதுகுறித்து சாய்பல்லவி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது,

"அடிப்படை ஆதாரமற்ற வதந்திகள், இட்டுக்கட்டப்பட்ட பொய்கள், தவறான அறிக்கைகள் உள்நோக்கத்துடனோ, இல்லாமலோ பரப்பப்படுவதைக் காணும் போதெல்லாம் பெரும்பாலான சமயங்களில் நான் அமைதியாக இருக்கவே விரும்புவேன். ஆனால் தொடர்ந்து இவ்வாறு நடப்பதால், குறிப்பாக எனது படத்தின் வெளியீட்டின் போதோ, அறிவிப்புகள் வெளியாகும் சமயங்களிலோ இது போன்ற வதந்திகள் பரப்பப்படுவதால், அதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய நேரம் இது என நினைக்கிறேன். அடுத்த முறை ஏதேனும் பிரபலமான பக்கமோ, ஊடகமோ, தனிநபரோ, கிசுகிசு (அ) செய்தி என்ற பெயரில் இதுபோன்ற தவறான தகவலை பரப்பினால், அதனை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்"

இவ்வாறு சாய்பல்லவி தெரிவித்துள்ளார்.

Advertisement