இந்தியாவில் அதிநவீன ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் கூகுள்!
கூகுள் அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன்களை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டு யூசர்களுக்கு பல்வேறு விதமான புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் வெளியாகின்றன. அந்த வகையில் Google Pixel 8 Pro ஸ்மார்ட்போனில் தற்போது உடல் வெப்பநிலையை அளவிடக்கூடிய அம்சம் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் கடந்த ஆண்டு Google Pixel 8 Pro ஸ்மார்ட் போன் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் உள்ள கேமரா பேண்டில் தெர்மாமீட்டர் இணைக்கப்பட்டு பல்வேறு விதமான ஆச்சரியமூட்டும் அம்சங்களை கொண்டிருந்தது. அந்த பிசிக்கல் தெர்மாமீட்டரில் வெப்பநிலையை படிப்பதற்கான செயல்பாட்டை நிறுவனம் கொடுக்கவில்லை.
ஆனால் தற்போது ஒரு புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்துவதன் மூலமாக உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கான திறனை அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கூகுள் அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவில் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.